NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

36,771 புகையிரத பயணங்கள் மாத்திரமே குறித்த நேரத்தில் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிப்பு..!

இலங்கை புகையிரத திணைக்களமானது 2023ஆம் ஆண்டில் திட்டமிட்ட ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 426 புகையிரத பயணங்களில் 36,771 புகையிரத பயணங்கள் மாத்திரமே குறித்த நேரத்தில் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

அதன்படி, 85,655 புகையிரத பயணங்கள் தாமதமாக அல்லது இரத்து செய்யபட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 10,571 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 70 வீதமான புகையிரத பயணங்கள் சரியான நேரத்திற்கு பயணிக்கவில்லை எனவும் தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 13ஆயிரத்து 759 புகையிரத பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதில் 36,053 புகையிரத பயணங்கள் மாத்திரமே நியமிக்கப்பட்ட குறித்த நேரத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, 30 வீதமான புகையிரத பயணங்கள் மாத்திரமே சரியான நேரத்தில் பயணித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் தேசிய தணிக்கைச் சட்டம் எண் 19 மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் படி, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான நடவடிக்கைகள் குறித்து தேசிய தணிக்கைத் தலைமைச் செயலகத்தால் நடாத்தப்பட்ட தணிக்கை நிதிநிலை அறிக்கையில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles