NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

40 ஆண்டு கால ‘உதயம்’ தியேட்டரின் முடிவு காலம் நெருங்கியது!

இந்தியா – சென்னை, அசோக் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்டிருந்தது. பின்னாட்களில் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் திரையரங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு, மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது.

உதயம் திரையரங்கில் முதலில் திரையிடப்பட்ட படம் ரஜினி நடித்த ‘சிவப்பு சூரியன்’. 80-கள், 90-கள் தொடங்கி இன்று வரை ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் படங்களுக்கான முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களுக்கு பேர் போன ஒரு சில திரையரங்குகளில் உதயமும் ஒன்று.

குறிப்பாக, 80-கள், தொண்ணூறுகளில் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் நாட்களில் சாலையின் ஓரம்வரை ரசிகர்கள் கூட்டம் அலைமோதி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். ரஜினியின் ‘படையப்பா’, ‘அருணாச்சலம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட படங்கள் இங்கு ஒரே ஸ்க்ரீனில் 150 நாட்களை கடந்து ஓடியுள்ளன.

பல்வேறு சட்ட சிக்கல்களால் 2008 வரை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்த உதயம் தியேட்டரை 2009-ஆம் ஆண்டு ஐந்து உரிமையாளர்களில் ஒருவரான பரமசிவம் பிள்ளை, ரூ.80 கோடி ஏலத்தில் வாங்கியிருந்தார். அன்று முதல் கடந்த 15 ஆண்டுகளாக ‘இப்போது விற்கப்படுகிறது, நாளை விற்கப்படுகிறது.

பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று, 1.3 ஏக்கர் பரப்பளவு கொண்ட உதயம் தியேட்டர் இடத்தை வாங்கியிருப்பதாகவும், விரைவில் அங்கு 25 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது சென்னை சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share:

Related Articles