NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

5 நாட்களுக்குள் சினிமா பாணியில் படுகொலை செய்யப் பட்ட காதலர்கள் – மொனராகலையில் சம்பவம்…!

ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.மதுள்ளை பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 22 வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,அதே பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை 24 வயதுடைய இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.யுவதியின் முன்னாள் காதலன் தலைமையிலான குழுவினர் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னாள் காதலன் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் அப்பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Share:

Related Articles