NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

50 ஆண்டுகளுக்குப் பின்னர் சஹாரா பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர், பலத்த மழை காரணமாக சஹாரா பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சஹாரா பாலைவனப் பகுதியில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இதுவே முதல்முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடம் முழுவதிலும், பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய இரிக்கி ஏரியின் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை நாசா விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த நேரத்தில் இவ்வாறான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மொராக்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles