NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 தலைவர்கள் உட்பட 8 புதிய நியமனங்கள் – உயர் பதவிகள் பற்றிய குழு அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இரண்டு அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் 6 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (12) அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற அறிக்கையின்படி, உயர் பதவிகளுக்கான குழு பின்வரும் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது:

அமைச்சின் செயலாளர்கள்:

• யமுனா பெரேரா மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு செயலாளர்.
• சு.ஆ.று.ளு சமரதிவாகர – நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்.

தலைவர்கள்:

• சுஜீவ ராஜபக்ஷ – மக்கள் வங்கியின் தலைவர்.
• பேராசிரியர் எஸ்.ஆர்.டி ரோசா – இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் தலைவர்
• ரத்னசிறி களுபஹன – இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
• ஏ. கல்கெட்டிய – மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் தலைவர்
• ஸ்டெல்லா மாரப்பன – பொது செயல்திறன் சபையின் தலைவர்
• ஜயந்த விஜேரத்ன – தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்

உயர் பதவிகளுக்கான குழு அண்மையில் (12) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த நியமனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, (சட்டத்தரணி) தலதா அத்துகோரள, உதய கம்மன்பில, (டாக்டர்) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share:

Related Articles