(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதமைக்காக, 6 வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி நிதி அபராதங்களை விதித்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, நிதி நிறுவனங்களுடன் இணங்குவதைச் செயல்படுத்த, 17 நவம்பர் 2022 முதல் 31 மார்ச் 2023 வiர் 5.5 மில்லியன் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு 500,000 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், எச்.டி.எப்.சி வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.