NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

6 வருடங்களுக்குப் பின் பிறந்த குழந்தை 5 நாட்களில் திடீர் உயிரிழப்பு…!

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாயார், குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், திடீரென சுகயீனமடைந்துள்ளது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், நேற்றைய தினம் (18) இரவு குழந்தை உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய்க்கு திருமணமாகி 6 வருடங்கள் கழித்து பிறந்த முதல் குழந்தை இதுவாகும்.இச் சம்பவம் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளத இந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles