இன்று நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணம், புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.