NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

AI Technology மனித குலத்தையே அழித்துவிடும்?

AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு Technology மனித குலத்தையே அழித்துவிடும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் குற்றம் சாட்டில் உள்ள நிலையில் அவரது கருத்துக்கு விஞ்ஞானிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு Technology தற்போது உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த Technology வந்த பிறகு டெக்னாலஜி உலகில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

ஒரு பக்கம் வேலை வாய்ப்பு குறைகிறது, வேலை நீக்க நடவடிக்கை அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் AI Technology என்பதை தவிர்க்க முடியாது என்றும் வருங்காலத்தில் இதுதான் அனைவராலும் கடைபிடிக்கக்கூடிய ஒரு Technology’யாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் AI Technology மனித குலத்தையே அழித்துவிடும் என்று எலான் மாஸ்க் கூறி இருப்பது முற்றிலும் அபத்தமானது என விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர்.

AI Technology’யை பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் விஞ்ஞானி ஒருவர் இது குறித்து கூறிய போது ’நல்லது கெட்டது என்பது நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது என்றும் ஒரு சக்தி வாய்ந்த கருவியை இயல்பாகவே ஆபத்தானது என்று கூறுவது அபத்தமானது என்றும் AI Technology என்பது அவ்வாறான ஒரு கருவி தான் என்றும் எந்த ஒரு கருவியையும் நன்மைக்காக பயன்படுத்துவதும் தீமைக்காக பயன்படுத்துவதும் நம்முடைய கையில் தான் இருக்கிறது என்றும் பொறுப்புடன் நெறிமுறையுடன் பயன்படுத்தினால் கண்டிப்பாக AI Technology மனித குலத்திற்கு மிகப்பெரிய வரமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் எலான் மஸ்க் இது குறித்து கூறியபோது AI Technology என்பது மனித குலத்திற்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் AI என்பது மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும் மனிதர்களை எளிதாக மிஞ்சி உலகை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்றும், மனிதர்களை அது கட்டுப்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கும் என்றும் கூறுகின்றார்.

AI Technology ஆபத்து குறித்த விவாதங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் ஆனால் கண்டிப்பாக நன்மைக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவி என பெரும்பான்மையான நிபுணர்கள் நம்புவதால் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். AI Technology என்பது நாம் எதிர்காலத்தை வளமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பம் என்றும், உலகின் சில பெரிய பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டது என்றும் அதனால் தான் AI Technology’யை நாங்கள் நம்புகிறோம் என்றும் மனித குலத்திற்கு ஆபத்தானது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

தற்போது AI Technology ஆரம்பகட்ட வளர்ச்சியில் தான் உள்ளது என்றும் எதிர் காலம் என்ன என்பதை இப்போதே கணிக்க முடியாது என்றும் எனவே இந்த Technology’யை ஆரம்பத்திலேயே முடக்க வைக்க நினைப்பது சரியானது அல்ல என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

Share:

Related Articles