(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான ‘எயார் சைனா’ மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளது.
அதற்கமைய முதல் விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்த சீன விமான நிறுவனம் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.