NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Aus VS Eng: 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஆரம்பம் !

பேட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles