NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

BOXING DAY TEST – அவுஸ்திரேலியா vs இந்தியா!

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ‘பார்டர்- கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டில் நடந்த 2ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

பிரிஸ்பேனில் நடந்த 3ஆவது டெஸ்ட் மழையின் பாதிப்பால் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அவுஸ்திரேலியா தரப்பில் முதல் 4 துடுப்பாட்ட வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

முதல் நாள் முடிவில் அபார துடுப்பாட்டத்தைவெளிப்படுத்திய அவுஸ்திரேலியா 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஸ்டீவ் சுமித் 68 ஓட்டங்களுடனும், கம்மின்ஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles