ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மன்ற கல்லூரியில் தற்போது இடம்பெற்றுவரும் அவசர அரசியல் சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சியின் தலைவராக செயற்பட நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.