அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள Clean Sri Lanka வேலைத்திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள், ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பனவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.