NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

CSK அணியை SRHஅணி இன்று எதிர்கொள்கிறது

16ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானாவும் சென்னை அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.

ஐதராபாத் அணி மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் பணிந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை அதட்டியது. கடந்த லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது.

மொத்தத்தில் 4ஆவது வெற்றியை பெற சென்னை அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணியும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13இல் சென்னையும், 5இல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles