NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Dambulla Aura அணி அபார வெற்றி!

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தம்புள்ளை ஓரா அணி மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஓரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் மெக்டர்மோட் 69 ஓட்டங்களையும் அலெக்ஸ் ரோஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில், மதிஷன பத்திரன 2 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா, சமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நுவனிந்து பெனார்டோ 21 ஓட்டங்களையும் மொஹமட் நாவாஸ் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நூர் அஹமட், மற்றும் துஸான் ஹேமந்த்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பினுர பெனார்டொ, மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக தம்புள்ளை ஓரா அணி சார்பில், 46 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பென்மெக்டர்மோட் தெரிவுசெய்யப்பட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles