NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

GT vs DC அணிகள் இன்று மோதல்!

17ஆவது IPL கிரிக்கெட் தொடரில் இன்று (17) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் – ரிஷப் பண்ட் தலைமையலான டெல்லி கெபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. 

டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3ஆவது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.

Share:

Related Articles