NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலன் தேவை என விளம்பரம் செய்த பெண் !

நியூயார்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் இணையதளத்தில் செய்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர் பகுதியில் எனக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அழகான வீடு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் வேண்டும். அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்க கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம். நான் ஒரு தடகள வீராங்கனை. அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற்றஇ இறக்கங்கள் இருக்கும். எனக்கு திருமணம் ஆகி 13இ15 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தந்தையுடன் வசிக்கிறார்கள். விவாகரத்துக்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை. எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இத்தாலியஇ இஸ்ரேலிய அல்லது யூதர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கபட்டேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் கிறிஸ்தவ ஆண் நண்பர் அல்லது காதலன் தேவை என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி பகிரப்பட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share:

Related Articles