NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்…!

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கணாமல் போனதாக கூறப்படும் கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் ஆயிரத்து 600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே, அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும், குறித்த ஐவரது உடால்களையும் மீட்க முடியும் என தற்போதைக்கு கூற முடியாதுள்ளதாகவும் கரையோர பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles