NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7ஆவது குழு !

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது.

இந்த குழுவினர் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7-வது குழு இதுவாகும்.
இந்த குழுவில் நாசாவின் ஜாஸ்மின் மொக்பெலி ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொகென்சென்இ ஜப்பானை சேர்ந்த சடோஷி புருகாவா மற்றும்

ரஷ்யாவின் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகிய விண்வெளி வீரர்கள் செல்கின்றனர்.
இவர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 17 ஆம் திகதி தங்களது பணியை தொடங்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles