NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரான்ஸ் விமான விபத்தில் 2 இராணுவ வீரர்கள் பலி !

பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இலகுரக விமானமொன்று விழுந்து நொறுங்கியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விமானம் விழுந்த பகுதியை தேடியுள்ள நிலையில் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்த, தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் இதன்போது பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு இராணுவ வீரர்களும் அருகில் உள்ள ஹெலிகாப்டர் படைப்பிரிவு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த வீரர்கள் என இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles