NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடுவானில் மோதிக்கொண்ட ராணுவ பயிற்சி விமானங்கள்

இத்தாலியின் ரோம் நகரின் அருகே இன்று விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இரண்டு பயிற்சி விமானத்திலும் பயணித்த விமானிகள் உயிரிழந்துள்ளனர். விமானம் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுட்டு வருகின்றது.

விமானிகள் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் U-208 என்ற இலகுரக, ஒற்றை என்ஜின் கொண்ட விமானம் ஆகும். இதில் விமானியுடன் சேர்த்து 5 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 285 கிமீ வேகத்தில் இந்த விமானத்தை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles