NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பில்லியன்களில் பதிவாகிய துருக்கியின் சேதக் கணிப்பு !

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக அங்கு 34.2 பில்லியன் டொலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

குறித்த சேதங்களை புனரமைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான செலவுகள் எதிர்பார்ப்பதை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும் என துருக்கிக்கான உலக வங்கியின் இயக்குநர் Humberto Lopez தெரிவித்துள்ளார்.

துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி அன்று அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles