NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது: பிரான்ஸ் மக்கள் போராட்டம்

யுக்ரைன் – ரஷ்யா போர் ஆரம்பித்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பல நாடுகளில், யுக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் யுக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரான்ஸின் தலைநகர் பாரீஸ் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் யுக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பிரான்ஸ் மற்றும் யுக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், ‘போர் வேண்டாம், அமைதி வேண்டும்’, ‘மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்’, ‘நேட்டோவை விட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்தபடி பேரணியாகச் சென்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles