உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஜப்பானில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கணினி செயலிழப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜப்பானிய கார் உற்பத்தியாளர் அதன் 14 உள்நாட்டு ஆலைகளின் செயல்பாடுகளை நிறுத்தியதால், நிறுவனத்தால் பாகங்களை முன்பதிவு செய்ய முடியவில்லை என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.