NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உடல் பயிற்சி செய்த நிலையிலேயே உயிரிழந்த பிரபலம் !

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமும், அதுதொடர்பான தகவல்களை வழங்கியதன் மூலமும் சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டவர் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த ஜஸ்டின் விக்கி.

33 வயதான இவர், உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தபோது 210 கிலோ பாரத்தை தூக்க முயற்சித்த நிலையில், அதன் பார்பெல் கழுத்தில் விழுந்ததால் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், ஜஸ்டின் விக்கி பாரடைஸ் பாலி ஜிம்மில் தனது தோள்களில் பார்பெல்லை வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்ய முயற்சிப்பதைக் காண முடிகிறது.

அதாவது, அந்த பாரத்தை வைத்து அவர் உட்கார்ந்தும், எழுந்தும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அப்படி எடையை தூக்கி அமரும்போது அவரால் எழ முடியாமல் உட்கார்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும் உடற்பயிற்சி குறித்து தகவல்கள் வெளியிட்டு வந்த இவர் உடற்பயிற்சி நிலையிலேயே உயிரிழந்தமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Share:

Related Articles