NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பின்லாந்தில் துப்பாக்கிச் சூடு- 12 வயது மாணவன் கைது

பின்லாந்தின் தலைநகர் Finnish பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச்சூடு காரணமாக அதே வயதுடைய ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த பாடசாலை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles