IPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க BCCIஅனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த புதிய இரண்டு விதிகளைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இம்பாட் வீரர் என்ற விதியை அறிமுகப்படுத்தியமைகுறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு சம்பியன் பட்டம் பெற்ற CSK அணியும் RCB அணியும் முதல் போட்டியில் இன்று(22) மோதவுள்ளது
1. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்
பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்களை வீசலாம். முன்னதாக ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும். 2வது வீசப்படும் பவுன்ஸர் நோ பால் ஆக அறிவிக்கப்படும். இனிமேல் 3வது ஆக வீசப்படும் பவுன்ஸர் மட்டுமே நோ பால் ஆகும்.
பந்து வீச்சாளருக்கு இது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் சோதனை அடிப்படையில் 2023-24 சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே இதனை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.
2. ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்
ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.