இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டியில் முன்னாள் சம்பியன் சென்னையின் FC அணியில் இடம்பிடித்திருந்த நடுகள வீரர் 35 வயதான ரபேல் கிரிவெல்லாரோ (பிரேசில்) நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.
அவர் சென்னை அணிக்காக ஆடிய 54 ஆட்டங்களில் 14 கோல் அடித்திருப்பதுடன், 16 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.
இதே போல் நடப்பு சம்பியன் மும்பை சிட்டி FC அணியின் நடுகள வீரர் வினித் ராயின் ஒப்பந்தம் காலம் வருகிற 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்பதால் அவரும் மும்பை அணியில் இருந்து வெளியேறினார்.