லிட்டில் ஜோர்ஜியா பார்ன்ஸ் ஏனைய 14 போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை முறியடித்து ஜூனியர் மாஸ்டர்செஃப் அவுஸ்திரேலியா 2020 இன் வெற்றியாளரானார்.
இறுதிப் போட்டிக்குஇ ஜோஜியா இலங்கை உணவை சமைக்க முடிவு செய்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ‘நான் கிராண்ட் ஃபைனாலுக்குச் சென்றால், எனது பாரம்பரியத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.’ சேனல் 10 ரியாலிட்டி ஷோவில், நான் என் நன்னா மற்றும் என் அப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அவர்கள் இருவரும் இலங்கையர்கள். பலவிதமான இலங்கை உணவுகளை எப்படி செய்வது என்று என் நன்னா எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
வெற்றி பெற்ற குட்டி ஜோர்ஜியா தனது முக்கிய உணவாக முந்திரி கறி, பன்றி கறி, கத்தரிக்காய் கறி, பப்படம், வெள்ளரி ரைத்தா மற்றும் மஞ்சள் சாதம் உட்பட பல இலங்கை உணவுகளை 11 வயது சிறுமி தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது!