NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் நாளையும் மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles