இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தனது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் காரணம் காட்டியுள்ளது.
அத்தோடு புதிய குழு விதிமுறைகள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதானி கிரீன் இலங்கையின் முதலீட்டு வாரியம் (BOI) “மரியாதையுடன் விலகும்” முடிவைத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அதானி குழுமத்திடமிருந்து அதிகாரபூர்வமான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் அதே நேரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.