NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலியில் போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வு – யுவதி உட்பட 12 பேர் கைது!

காலி, பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வொன்றை நடத்தியதாக கூறப்படும் யுவதி உட்பட 12 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பெந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை, பெந்தோட்டை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த யுவதியும் 11 இளைஞர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles