ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதமின்றி விரைவாக நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்