எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி பொலன்னறுவை மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும்இஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்குமான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும்.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களைக் குறிப்பதற்கும் குறுக்கு குறியை (‘X’) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.