NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

62 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 62 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (31) பிற்பகல் இந்த அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டது.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்கை, காலி மாவட்டத்தில் நயாகம பத்தேகம, எல்பிட்டிய, காலி – கோட்டை, அக்மீமன, அம்பலாங்கொடை, போபே பொத்தல, நெலுவ, இமதுவ, தவலம, நாகொட மற்றும் யக்கலமுல்ல, பெலாத்தம், வலஸ்மம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒகேவெல மற்றும் கடுவான ஆகிய இடங்களில் இது நடைமுறைக்கு வருகிறது.

Share:

Related Articles