LPL 4 ஆவது பருவகாலத்திற்கான போட்டித் தொடரில் 11 ஆவது போட்டியில் Dambulla Aura அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Lyca’s Jaffna Kings அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய Lyca’s Jaffna Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இதேவேளை, பந்துக்கு பந்து உடனுக்குடன் ளுஊழுசுநு விபரங்களை 99.5 மற்றும் 99.7 ஆகிய தமிழ் குஆ இன் வானொலி அலைவரிசைகளில் எப்போதும் எங்கும் நீங்கள் கேட்கலாம்.