NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL 2023: இன்று மாபெரும் இறுதிப் போட்டியில் கண்டி – தம்புள்ளை அணிகள் பலப்பரீட்சை!





லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (20) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பி லவ் கண்டி மற்றும் கோல் டைட்டன்ஸ் அணிகள் நேற்று (19) மோதின.


கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பி லவ் கண்டி அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.


அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில், அதிகபடியாக வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.


158 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கோல் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இந்நிலையில் முதலாவது தகுதிகாண் போட்டியில் தெரிவான தம்புள்ளை ஓரா அணியுடன் பி லவ் கண்டி அணி இன்று (20) இரவு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
கண்டி அணி இறுதிப் போட்டியில் பங்குபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Share:

Related Articles