NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LSG அணி பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லேங்கர் ?

அடுத்த பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் லக்னோவ் சுபர் ஐயன்ட்ஸ் அணி தமது பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கரை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் கிரிக்பஸ் (Cricbuzz) செய்திச் சேவை வெளியிட்டுள்ள கருத்திற்கு அமைய ஜஸ்டின் லேங்கருக்கும், லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்தப் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் ஜஸ்டின் லேங்கர் லக்னோவ் அணியுடன் பயிற்சியாளராக இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜஸ்டின் லேங்கர் பயிற்றுவிப்பிலான அவுஸ்திரேலிய அணி 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை வெற்றி கொண்டதோடு, அதன் பின்னர் பிக்பேஷ் T20 லீக்  தொடரிலும் லேங்கர் பயிற்றுவிப்பிலான பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles