ஆப்பிரிக்க நாடுகளில் எம்பொக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில், இதுவரை 700க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர்.
கடந்த வாரம் மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், எம்பொக்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான முதல் அங்கீகாரத்தை உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.
இது ஆப்பிரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் எம்பொக்ஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படியாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.