NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Pink நிறத்தில் போலி Whatsapp – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை…!

இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் போலி Whatsapp குறித்து கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்த ஒரு போலியான லிங்க் உள்ளடக்கிய ஒரு whatsapp msg சமீபத்தில் Whatsapp பயனர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

மோசடி செய்பவர்கள் பலருக்கு இந்த இணைப்பை whatsapp மூலமாகவே அனுப்புகிறார்கள். இந்நிலையில் pink Whatsapp க்கான Link-ஐ கிளிக் செய்யவோ அல்லது pink Whatsapp ஐ பதிவிறக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Malware எனும் மென்பொருள் மூலம் உங்கள் தொலைபேசியை HACK செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இணைப்பைக் கிளிக் செய்பவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட படங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், நிதி இழக்கபடலாம், spam தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் மற்றும் தொலைபேசி சாதனங்களின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து விடுபட முதலில் பதிவிறக்கம் செய்த போலியான செயலியை உடனடியாக uninstall செய்ய வேண்டும் எனவும், அதிகாரப்பூர்வ Google Play Store, iOS App Store அல்லது முறையான இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Share:

Related Articles