NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

QR முறையில் இனி மீன் வாங்கலாம் – இன்று முதல் அறிமுகம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான ஞசு குறியீட்டு முறை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் கம்பஹா மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

நவீன டிஜிட்டல் உலகுக்கு ஏற்றவாறு அரச நிறுவனங்களை மேம்படுத்தும் புதிய திட்டத்துடன், லங்கா மீன்வளக் கூட்டுத்தாபனம் ளுடுவு ஆழடிவைநட மற்றும் டுயமெய ஞச உடன் இணைந்து இந்த புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இன்று (13) முதல் நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களில் ஞசு குறியீடு முறைகள் மூலம் பணம் செலுத்த முடியும்.

எதிர்காலத்தில், பல துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கும் அN வேளையில், மோசடி மற்றும் ஊழல் இல்லாத நிதி செயல்முறையை செயல்படுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles