அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவன குழுமம் நடத்தி வருகிறது. இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மீது வைக்கப்பட்டு, மோட்டார் மூலம் இயக்கப்பட்டு அவர்களின் மேஜைக்கு அனுப்பப்படுகிறது. சம்பவ நாளில் உணவகத்திற்கு வந்த இளைஞர் அங்கு வைக்கப்பட்ட சோயா சாஸ் பாட்டில், தேநீர் கோப்பை, கன்வேயர் பெல்டில் வந்து கொண்டிருந்த சுஷியை வாயால் சுவைத்துள்ளார்.
மேலும் இவை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சுஷி டெரரிசம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் காரணமாக அகின்டோ சுஷிரோ உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வியாபாரம் மந்தமானதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர், தங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அகின்டோ சுஷிரோ வலியுறுத்தி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. சம்பவம் தொடர்பாக பொது வெளியில் மன்னிப்பு கோரிய இளைஞர், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், தான் இவ்வாறு செய்யவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.