NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்…!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ஈட்டியுள்ளது.சென்னையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுகொண்டது.பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ஓட்டங்களையும், அப்துல்லா ஷபீக் 58 ஓட்டங்களை பெற்று கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் நூர் அகமது 3 விக்கெட்டுக்களையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுக்களை முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய் தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles