ஆசியக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய வீரர் இர்பான் பதானின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமப்படுத்தியுள்ளார்.
நேபாளத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 10 ஓவரில் 40 ஓட்டங்களைக் கொடுத்த ஜடேஜா, 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் 50 ஓவர் ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த இந்திய பந்து வீச்சாளர் என்ற இர்ஃபான் பதானின் 22 விக்கெட் சாதனையை சமன் செய்துள்ளார்.
- ரவீந்திர ஜடேஜா : 22 விக்கெட்கள் (15 இன்னிங்ஸ், 24.5 சராசரி)
- இர்பான் பதான் : 22 விக்கெட்கள் (12 இன்னிங்ஸ், 27.5 சராசரி)
- சச்சின் டெண்டுல்கர் : 17 விக்கெட்கள் (15 இன்னிங்ஸ்)
- கபில் தேவ் : 15 விக்கெட்கள் (7 இன்னிங்ஸ், 13 சராசரி)