NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னாபிரிக்க T20 தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்படும் பௌமா..! புதிய தலைவராக மர்க்ரம்.

தென்னாபிரிக்க T20i அணியின் புதிய தலைவராக துடுப்பாட்ட வீரர் எய்டன் மர்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைத்துவ கட்டமைப்பினை மாற்றுவதற்கான தீர்மானங்கள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன அந்தவகையில் கடந்த மாதம் T20i அணியின் தலைவர் பதவயிலிருந்து தெம்பா பௌவுமா விலகுவதாக அறிவித்திருந்தார். எனினும் சர்வதேச ஒருநாள் அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்பட இவர் தீர்மானித்திருந்ததுடன், டெஸ்ட் அணியின் தலைவராகவும் டீன் எல்கருக்கு பதிலாக பின்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.

எய்டன் மர்க்ரம் தென்னாபிரிக்க 19 வயதின் கீழ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன், 2014ம் ஆண்டு இவரின் தலைமையில் கிண்ணத்தையும் அணி வென்றிருந்தது. அதனைத்தவிர்த்து உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளுக்கான அணிகளின் தலைவராக இவர் செயற்பட்டிருந்தார். இறுதியாக SA T20 லீக்கில் சன்ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தலைவராக இவர் செயற்பட்டதுடன், அந்த அணி கிண்ணத்தையும் வென்றிருந்தது. எய்டன் மர்க்ரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20I தொடர் இவருடைய முதல் தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles