NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சலார் 2’ முக்கிய பாத்திரத்தில் இவர் இல்லை

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘சலார்’. இப்படத்தின் 2-வது பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்தில் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவருக்கு சலார் படத்தின் 2-வது பாகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இதுவரை அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles