19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகப்பட்சமாக Harjas Singh 55 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக Raj Limbani 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு 254 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.