NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SL vs AFG : வெற்றி இலங்கைக்கு !

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்ட – சூாியவெவ மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவா்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.


117 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவில் 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இதனடிப்படையில் 9 விக்கெட்டுக்களால் இலங்கை அணியினர் வெற்றியை சுவீகரித்து கொண்டனர்.

Share:

Related Articles