T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை டர்ஹாம் அணி படைத்துள்ளது.
சிம்பாப்வேயின் உள்நாட்டு T20 போட்டியின் இறுதிப் போட்டியில் மஷோனாலண்ட் ஈகிள்லை 213 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், புதிய உலக சாதனையையும் டர்ஹாம் அணி படைத்துள்ளது.
மஷோனாலண்ட் ஈகிள்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டர்ஹாம் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க ஆட்டக்காரர் ஒல்லி ரொபின்சன் 20 பந்துகளில் 49 ஓட்டங்களை குவித்தார்.
நெதர்லாந்தின் பாஸ் டி லீட் 29 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் அடங்களாக 58 ஓட்டங்களை குவித்தார்.
20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்த டர்ஹாம் அணியினர் 229 ஓட்டங்களை குவித்தனர்.
இதனையடுத்து இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மஷோனாலண்ட் ஈகிள்ஸ் அணியினர் 8.1 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 16 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் டர்ஹாம் அணியினர் 213 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
213 என்ற வெற்றி வித்தியாசம் T20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்சம் மற்றும் சர்வதேசம் அல்லாத T20 போட்டிகளில் அதிகபட்ச ஓட்ட வித்தியாசமாக பதிவாகியுள்ளது.
ஒரு அணி T20 போட்டியில் 200 ஓட்டங்களுக்கு மேல் வெற்றி பெற்ற நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
2023 இல் ஸ்பெயினுக்கு எதிராக ஐல் ஆஃப் மேன் அணியினர் 10 ஓட்டங்களும், 2022 இல் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸுக்கு எதிராக சிட்னி தண்டர்ஸ் 15 ஓட்டங்களும் பெற்றதே இதுவரை T20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட மிக குறைந்த ஓட்டங்களாகும்.
இந்நிலையில், மஷோனாலண்ட் ஈகிள்ஸ் அணியினர் பெற்றுக்கொண்ட 16 ஓட்டங்களானது மூன்றாவது குறைந்த ஓட்டங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.